×

பத்தவச்ச சுசித்ரா... பற்றி எரியும் கேபி, சிவானி! கொதிக்கும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை தான். ஆனால் நன்றாக பேசிக்கொண்டு இருந்த இரண்டு பேருக்குள் சுத்தமாக பேச்சுவார்த்தை நின்று போனது ரசிகர்கள் கவனத்துக்கு வந்துள்ளது. 

 

ஆரம்ப காலத்தில் நல்ல தோழிகளாக இருந்த ஷிவானியும், கேப்ரியலாவும் தான் அது. முதன்முறையாக ஹார்ட் பிரேக் டாஸ்க்கில் எல்லாரும் ஷிவானிக்கு ஹார்ட் பிரேக் அளித்தபோது கேப்ரியலா மட்டும் தான் அவருக்கு ஆதரவு அளித்தார்.

இதேபோல அடுத்தடுத்து நடந்த சில டாஸ்க்குகளில் அனைவரும் ஷிவானிக்கு எதிராக இருந்தபோது கூட கேப்ரியலா அவருக்கு ஆதரவாக இருந்தார். எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்தபோது தான் பாலாஜி-ஷிவானி இடையே தனி டிராக் உருவானது. 

இருவரும் 24 மணி நேரமும் பேசியது சக போட்டியாளர்கள் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த சுசித்ரா இதில் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றி விட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் ஓரணியாக மாறினர்.

இதில் சமீபத்தில் நடைபெற்ற 'பத்திரம்' டாஸ்க்கில் ஹானஸ்ட் என்னும் வார்த்தையை வைத்து பாலாஜி-கேப்ரியலா இருவரும் மோதிக்கொண்டனர். அப்போது ஷிவானி, பாலாஜிக்கு ஆதரவாக பேச, கேப்ரியலா டென்ஷனானார். 

அதில் இருந்து இருவரும் பேசிக்கொள்வது இல்லை போல . நேற்று நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக பேசி, சிரித்தபோது கூட இருவரும் பேசிக்கொள்வது போல இல்லை. இதனால் என்னப்பா ஆச்சு? இவங்களுக்கு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News