×

யோகிபாபுவுக்கு நாளை திருமணம்.. பெண் யார் தெரியுமா?..
 

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு நாளை திருமணம் நடப்பது உறுதியாகியுள்ளது.
 

சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார். சிவகார்த்திகேயன், சந்தானம், விஜய், அஜித், ரஜினி என முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணம் என சமீப காலமாகவே செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், அவை வதந்தி என யோகிபாபு மறுத்து வந்தார். 

இந்நிலையில், அவருக்கு வெல்லூரை சேர்ந்த மஞ்சு என்கிற பெண்ணுடன் நாளை காலை திருத்தனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது உறுதியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.     

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News