×

காதலர் தினத்தில் களத்தில் இறங்கும் ‘சூரரை போற்று’

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரை போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘மாறா தீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சூர்யா பாடிய இந்த பாடலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ஒரு ரொமான்ஸ் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் கூறியபோது ’வரும் காதலர் தினத்தில் இந்த படத்தின் ஒரு மெலடி ரொமான்ஸ் பாடலை வெளியிடலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இதனை அடுத்து வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த படத்தின் ரொமான்ஸ் பாடல் ஒன்று வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகவுள்ளது. நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News