×

#GetWellSoonSPBSIR இந்திய ட்ரெண்டிங்கில் கூட்டு  பிரார்த்தனை!

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினர். இதையடுத்து திரை பிரபலங்கள் , நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைபிரபலங்கள் ஒன்று கூடி இன்று மாலை அவருக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். மேலும் ட்விட்டரில்   #GetWellSoonSPBSIR என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்களும் அவருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்ய இது இந்திய அளவில் ட்ரண்டானது.

From around the web

Trending Videos

Tamilnadu News