கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்!
Aug 4, 2026, 22:48 IST
தமிழ் சினிமாவில் சிலம்பரசனின் 'தொட்டி ஜெயா' படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் பிரதீப் ராவத். அதன் பிறகு சூர்யாவின் 'கஜினி' படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டியிருந்தார்.
இந்த படம் மூலமாகத் தான் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 'கஜினி' படத்தின் வெற்றிக்கு பிறகு 'வாத்தியார், அசல், ராஜபாட்டை, ஜில்லா, வீரம், ஆம்பள' போன்ற பல படங்களில் நடித்தார்.
பிரதீப் ராவத் தமிழ் மொழி மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இரத்தப் புற்றுநோய் காரணமாக மும்பையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பிரதீப் ராவத் (வயது 74) இன்று காலமானார் என்று தகவல் கிடைத்திருக்கிறது.
