Categories: Cinema News latest news

விஜய்யை விட நான் சின்ன பொண்ணா?.. வயதை வெளிப்படையாக சொன்ன கில்லி அம்மா!..

கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜானகி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரது வயது குறித்தும் விஜய்யுடன் தன்னுடைய வயதை கம்பேர் செய்து பேசியது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். தரணி இயக்கத்தில் 2004ம் ஆண்டு கில்லி படம் வெளியானது. அந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக ஜானகி நடித்திருந்தார். அப்பாவாக ஆஷிஷ் வித்யார்த்தி நடித்திருந்தார்.

20 ஆண்டுகள் கழித்து அந்த படம் மீண்டும் ரிலீஸாகி வசூல் வேட்டையாடி வருகிறது. சுமார் 20 கோடி வசூலை இதுவரை கில்லி ரீ ரிலீஸ் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரமும் கில்லி படம் தியேட்டர்களில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கங்குவா பார்ட் 2ல இவர்தான் வில்லனா?.. சிறுத்தை சிவாவே சொல்லிட்டாரே!.. வெறித்தனம்தான் போங்க!..

கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜானகி ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜீன்ஸ் படத்திலும் ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக 1998ம் ஆண்டே நடித்திருப்பார். 2004ம் ஆண்டு கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த அவர் பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விஜய்யை விட அவரது அம்மாவாக நடித்தவரின் வயது கம்மி என ட்ரோல்கள் பறந்த நிலையில், விக்கிபீடியாவில் இருப்பது எல்லாம் உண்மையில்லை என்றும் விஜய்யை விட எனக்கு அதிக வயது நான் சீனியர் சிட்டிசன் என உண்மையை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

இதையும் படிங்க: நயன்தாரா என்ன காட்டுறது!.. நான் நல்லா காட்டுறேன் பாருங்க!.. அதே விழாவில் மிரட்டிய பிரபல நடிகை!..

கில்லி படத்தின் ரீ ரிலீஸுக்கு ரசிகர்கள் மிகப்பெரியளவில் ரெஸ்பான்ஸ் கொடுத்த நிலையில், கோட் படம் வெளியாகும் போது பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. லியோ படத்தின் 2ம் பாதி சொதப்பியது போல கோட் படத்தில் எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் கில்லி மாதிரி படம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

Saranya M
Published by
Saranya M