கில்லி விஜய் தங்கச்சிக்குத் திருமணம்!.. கலந்துக் கொண்ட பிரபலம் யார் தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் அவரது தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நான்சி ஜெனிஃபர். இந்நிலையில், நான்சி ஜெனிஃபருக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. அவரது திருமணத்தில் உடன் நடித்த சில சீரியல் நடிகர்கள் பங்கேற்றனர். குறிப்பாக குக் வித் கோமாளி ஷோவில் பிரபலமான சுனிதா கோகோய் பங்கேற்று நான்சியை வாழ்த்தியுள்ளார்.
சென்னையில் நேற்று நான்சி ஜெனிஃபர் மற்றும் கார்த்திக் திருமணம் நடைபெற்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், அவருக்கு திருமணம் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனிஃபர் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கில்லி திரைப்படத்தில் விஜய் செல்லமாக அரிசி மூட்டை என்று அழைக்கும் அந்தக் கதாபாத்திரத்திரம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14, உனக்கும் எனக்கும், ஜாம்பவான், தோழா, தீயா வேலை செய்யணும் குமாரு, கூட்டத்தில் ஒருத்தன், ட்ரிப் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், வள்ளி, சித்தி 2 போன்ற சீரியல்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பிறகு நடிப்பிலிருந்து விலகி சோப்பு தொழிலிலும் கவனம் செலுத்தி வந்த நான்சி, தற்போது தனது வாழ்க்கையின் புதிய பாதையை தொடங்கியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
