இந்தி நடிகர்களை போட்டா மட்டும் பேன் இந்தியா படமில்லை!.. லியோவுக்கு நறுக்குன்னு குட்டு வைத்த ஞானவேல்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் பேன் இந்தியா திரைப்படமாக இருக்கும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், யஷ், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் தான் பேன் இந்தியா ஹீரோக்களாக உள்ளனர். தமிழ் சினிமாவில் அதுபோல ஒரு ஹீரோ கூட இல்லை.

கங்குவா திரைப்படம் மூலம் சூர்யா பேன் இந்தியா ஹீரோவாக மாறப் போகிறார். கங்குவா திரைப்படம் நிச்சயம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் அள்ளும் என ஞானவேல் ராஜா உறுதியாக நம்புகிறார்.

வெறும் இந்தி நடிகர்களை படத்தில் நடிக்க வைத்தால் அந்த படங்கள் பேன் இந்தியா படங்கள் ஆகிவிடாது, தமிழில் சில படங்கள் அதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டன. அந்த படங்களின் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. ஆனால் அந்த படங்கள் இந்திய அளவில் வெற்றி பெறவில்லை என்றார்.

2.0 படத்தில் ஷங்கர் அக்‌ஷய் குமாரை நடிக்க வைத்திருந்தார். கேஜிஎஃப் ஹிட் அடித்ததை போலவே நம்ம படமும் பேன் இந்தியா வெற்றியைத் பெற வேண்டும் என நினைத்த விஜய் லியோ படத்தில் சஞ்சய் தத்தை வில்லனாக்கி இருந்தார். ஆனால், இந்த படங்கள் பேன் இந்தியா அளவில் வெற்றி பெறவில்லை என்பதைத் தான் மறைமுகமாக ஞானவேல் ராஜா கூறுகிறார் என விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் சூர்யாவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கங்குவா திரைப்படம் வெளியானால் தான் சிறுத்தை சிவா அடுத்த அண்ணாத்த படத்தை எடுத்து வைத்திருக்கிறாரா? அல்லது விவேகம் படத்தை எடுத்து வைத்திருக்கிறாரா? என்றே தெரியும் என கலாய்த்து வருகின்றனர். கோட் படத்தை விட கங்குவா படம் தான் வசூல் செய்யும் என சூர்யா ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர்.

Related Articles

Next Story