×

முரட்டு குத்து போய்  "இரண்டாம் குத்து" வருது - அட்டகாசமான டைட்டில்!

இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் பார்ட் 2 டைட்டில் இதுதான்

 

ஹரஹரமஹாதேவகி படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கிய திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. அடல்ட் காமெடி  வகையில் உருவான இப்படத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அடல்ட் காமெடி வகை என்றாலும் நகரங்களில் பெண்களே இப்படத்தை விரும்பி பார்த்தனர். ஆனால், நல்ல சினிமாக்களை விரும்பும் சினிமா விமர்சகள் மற்றும் ரசிகர்கள் இப்படத்தை கழுவி ஊற்றினார். எனினும், வியாபார ரீதியாக இப்படம் நல்ல வசூலை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இப்படத்தில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரே ஹீரோவாக நடித்துள்ளார். முதல் பாகத்தை விட இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடப்பெறும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு " இரண்டாம் குத்து" என டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News