×

திரைப்படங்களை நிர்வாணமாக சென்று பாருங்கள் - மிஷ்கின் பேட்டி
 

சைக்கோ திரைப்படம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கு அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.
 

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்தை பார்த்த பலரும் படத்தில் லாஜிக் ஓட்டை அதிகமாக இருக்கிறது. கொலைகாரன் கொலை செய்யும் ஒரு இடத்தில் கூடவா சிசிடிவி கேமாரா இருக்காது. கண் தெரியாத உதயநிதி அவனை கண்டுபிடிக்கும் போது போலீசார் ஏன் அவனை கண்டுபிடிக்காமல் உள்ளனர் என பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இது பற்றி விளக்கமளித்துள்ளார்.

திரைப்படங்களை பேரன்போடு பாருங்கள்.. உங்களுக்குள் ஒரு இயக்குனரை வைத்துக்கொண்டு என் படத்தை பார்க்கக் கூடாது.  சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில் அவன் கொலை செய்திருக்கலாம். அந்த இடத்தை அவன் தேர்ந்தெடுத்திருக்கலாம் அதையெல்லாம் காட்டினால் போராடித்து விடும்.

அதேபோல், போலீசை டம்மியாக காட்டியிருக்கிறேன் எனக்கூறுகிறார்கள். சைக்கோ கொலைகாரனை கண் தெரியாத என் ஹீரோதான் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் கதை. எனவே, போலீசை டம்மியாகத்தான் காட்ட வேண்டும். அதோடு, இதுவரை கண்டுபிடிக்கவே முடியாத கொலைகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, மூளையை கழட்டி வைத்து விட்டு திரைப்படங்களை பாருங்கள். ரசியுங்கள். ஆராய்ச்சி செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் திரைப்படங்களை ரசிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

மேலும், ஒரு திரைப்படத்திற்கு செல்லும் போது நீங்கள் நிர்வாணமாக செல்ல வேண்டும். ஹெல்மெட்டை பைக்கில் விட்டு வருவது போல் மூளையையும் கழட்டி வைத்து விட்டுத்தான் நீங்கள் செல்ல வேண்டும். படத்தில் இயக்குனர் என்ன சொல்கிறார் அதை மட்டுமே உணரவேண்டும். மூளையோடு பார்க்கமால் மனதோடு பார்க்க வேண்டும்.. படம் முடிந்ததும் அதுபற்றி யோசிக்கக் கூடாது என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

நிர்வாணம் என மிஷ்கின் குறிப்பிட்டிருப்பது ஆடைகளை அல்ல. எந்த எண்ணங்களும், எதிர்பார்ப்பும், கணிப்புகளும் இல்லாமல் மனம், மூளை இரண்டையும் வெற்றிடமாக வைத்துக்கொண்டு திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News