ஜப்பானுக்கு அடுத்து ஜெட் வேகத்தில் 5 படம்!.. கார்த்தி 30 படத்தில் கோட் ஹீரோயின்!..

 
karthi

நடிகர் கார்த்தியின் 30வது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கும் இந்த புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் பைலிங்குவல் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் கார்த்தி, தெலுங்கு திரையுலகில் அண்ணன் சூர்யாவை போல நேரடி ஹீரோவாக அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

karthi

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ‘MAD’ மற்றும் ‘MAD Square’ திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கல்யாண் சங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். அதிரடி, காமெடி மற்றும் குடும்ப அம்சங்கள் கலந்த முழுமையான என்டர்டெய்னராக இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது.

karthi30

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், கார்த்தி தற்போது ‘சர்தார் 2’ மற்றும் ‘மார்ஷல்’ உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நிலையில், அந்த படங்களின் ஸ்பெஷல் பர்த்டே போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. மேலும், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய குடும்பக் கதாபாத்திர திரைப்படத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாகவும், அந்தப் படத்தை அவரது அண்ணன் சூர்யா தனது 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

karthik

இப்படத்தின் பூஜை விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு  நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கார்த்தியின் 25வது படமாக வெளியான ஜப்பான் படுதோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் கார்த்தி நடித்து வெளியான மெய்யழகன் திரைப்படம் அனைவரையும் கவர்ந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிப் பெறவில்லை. சூர்யாவுக்கு கருப்பு போல கார்த்திக்கும் கூடிய சீக்கிரமே ஒரு பாக்ஸ் ஆபீஸ் படம் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Tags

From Around the web