Categories: Cinema News latest news

அஜீத் ரசிகர்களை சுண்டி இழுத்த கோட்… பிரபலம் சொன்ன அந்தத் தகவல்

கோட் படத்தை இன்று முதல் ஆளாக அதிகாலை 4 மணி காட்சி பார்த்து சூட்டோடு சூட்டாக ரிவியு கொடுத்தவர்களில் பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனும் ஒருவர். இந்தப் படத்தைப் பற்றி நாம் விமர்சனத்தில் கதையைப் பார்க்க வேண்டாம். ஏன்னா கதையைக் கேட்டா படம் பார்க்கும்போது சுவாரசியம் இருக்காது.

ஆனா சுவாரசியமான விஷயம் இருந்தா அதை வெளியே சொல்லலாம். அந்த வகையில் படத்தில் அஜீத் நடிக்கவில்லை என்றாலும் பல இடங்களில் அஜீத் தான் நம் நினைவுக்கு வருகிறார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

கோட் படத்தில் அஜீத்தை நினைவுபடுத்தும் வகையில் பல பாடல்கள் வருகிறது. அது மட்டுமல்லாமல் அவரது வசனத்தையும் விஜய் பேசுகிறார். சத்தியமா இனிமே குடிக்கக்கூடாதுன்னு சொல்கிறார். பிரேம்ஜி வரும்போதே அஜீத் பாடலைப் பாடிக்கிட்டுத் தான் வருகிறார்.

GT

படத்தில் அங்கங்கே அஜீத் பாடல்கள் ரீரிக்கார்டிங்ல வந்துருக்கு. இந்தப்படத்துல அஜீத்தைத் தன்னோட வெல்விஷர்னு தூக்கி நிறுத்திருக்காரு. விஜய் இனிமே சினிமாவுல நடிக்க மாட்டாரு.

அதனால என்னுடைய நண்பர் அஜீத்தோட படத்தை இனி பாருங்கன்னு சொல்லாம சொல்லிருக்காரு. இந்தப் படத்துல ஒரு விஜயோட பேரு என்னன்னு கேட்பாங்க. தலன்னு சொல்வாரு. அப்போ தியேட்டர்ல கைதட்டல் விழும். அதனால அஜீத் ரசிகர்களையும் திருப்திப்படுத்திருக்காங்க. அதனால படம் பார்க்க அவங்க ரசிகர்களும் வருவாங்க.

பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களும் படத்தைப் பார்க்க வருவாங்க. எல்லா ரசிகர்களும் படத்தைப் பார்க்க வந்தாங்கன்னா வசூல் எக்கச்சக்கமா எகிறிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also read: என்னங்கப்பா… கோட் படத்துக்கு அஜித் ட்ரெண்ட்டில் இருக்காரு… சேதி என்ன தெரியுமா?

அஜீத், விஜய் ரசிகர்கள் என்றால் எதிரும் புதிருமாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்கு தன்னோட தலைவர் படம் தான் கெத்து என்று அடிக்கடி மோதல்கள் வரும். சமூக வலைதளங்களிலும் இந்த மோதல் பட்டையைக் கிளப்பும். இனி அந்தத் தலைவலியை இந்தப் படம் போக்கி விடும் என்றே சொல்லலாம்.

ஆனால் அஜீத்தும், விஜயும் நல்ல நண்பர்கள். அதனால் தன் ரசிகர்களுக்குள் ஒற்றுமை வேண்டும் என்பதற்காகவே இப்படி சில காட்சிகளை அஜீத் ரசிகர்களுக்காகவே வைத்துள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v