Connect with us

Cinema News

டிக்கெட் ஓபன் செஞ்ச முதல் நாளே கோட்டுக்கு பஞ்சாயத்து… ஒன்னு கூடிட்டாங்கப்பா!

GoatMovie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கும் நிலையில் முதல் நாளே பஞ்சாயத்தை ரசிகர்கள் கூட்டத்தொடங்கி இருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் நான்காவது சிங்கிள் இன்று வெளியிடப்பட இருக்கிறது.

இதையும் படிங்க:  கோட் படம் ஓடிடியில் இப்படிதான் வெளியாகும்… சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு

கோட் திரைப்படத்தின் ஆடியோ  வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என விஜய் முடிவு  எடுத்துவிட்டாராம். இதனைத் தொடர்ந்து பாடல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி இருக்கிறது.

Rohini theatre

முதல் தியேட்டராக சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ரோகிணி திரையரங்கில் கோட் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பித்திருக்கிறது. ஆனால் முதல் நாள் டிக்கெட்டின் விலை 390 என குறிப்பிடப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: இளையராஜா நேரில் பார்க்க ஆசைப்பட்ட ஒரே சினிமா பிரபலம் இவர்தான்!.. ஆனா நடந்ததே வேற…

சாதாரணமாக 200 ரூபாய் டிக்கெட் என்பதிலயே மிகப்பெரிய சர்ச்சை இன்னும் ரசிகர்களிடம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஒரு டிக்கெட்டிற்கு 400 வரை கேட்பது மேலும் பிரச்சினையை உருவாக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்கும் போது இந்த தியேட்டரில்  மிகப்பெரிய ஸ்டார்களின் திரைப்படத்திற்கு மட்டும் ஸ்னாக்ஸ் உடன் சேர்ந்து டிக்கெட் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த 400 ஸ்னாக்ஸுக்கும் சேர்த்து வசூலிக்கப்படுவதாகவும் தங்கள் வெளியாகி இருக்கிறது. இதன் ஸ்கிரீன்ஷாட்களை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர். இன்று தான் முதல் திரையரங்கே டிக்கெட் விற்பனையை தொடங்கி இருக்கும் நிலையில் இப்போதே பிரச்சினையை ஆரம்பித்துவிட்டார்களே எனவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top