Categories: Cinema News latest news

சும்மா இருந்தா கூட போயிடும்… விசில் போடு பாட்டுக்கு எதிராக புகார்…என்ன விஷயம் தெரியுமா?

Whistle podu: நடிகர் விஜய் நடிப்பில் ரிலீஸாக இருக்கும் கோட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியான நிலையில், இன்று அதன் மீதான புகார் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு ஆரம்பிச்சிட்டாங்கப்பா மோடில் இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் பெருவாரியாக முடிந்துவிட்ட நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்புகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சண்டைக்காட்சியில் நடிக்கும் போது ரஜினிகாந்த் இதை செய்யவே மாட்டாராம்… மூன்றுமுகம் நடந்த அதிர்ச்சி சம்பவம்!…

இப்படத்தின் பிரண்ட்ஷிப் பாடல் தான் முதலில் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் விசில் போடு எனத் தொடங்கும் பாடல் நேற்று ரிலீஸானது. கிட்டத்தட்ட விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு முதல் விதையாக இப்பாடல் எழுதப்பட்டு இருப்பதாகவே கிசுகிசுக்கப்படுகிறது. விஜய் ரசிகர்களிடம் இப்பாடல் பெரிய அளவில் லைக்ஸை குவிக்கவில்லை.

இந்நிலையில் இப்பாடல் ரசிகர்களிடம் தவறான முன்னூதாரணத்தினை தருவதாக ஆன்லைன் மூலம் சமூக ஆர்வலரால் புகார் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில், விஜய் தன்னுடைய படங்களின் மூலம் பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறுகிறார். 

லியோ படத்தில் கூட போதை பொருளை ஆதரிப்பதாக பாடல் வெளியிட்டு இருந்தார். தற்போது விஜய் குரலில் வெளியிட்டு இருக்கும் பாடலிலும் இதே போன்று நாட்டில் கலவரத்தையும், போதை பொருளையும் ஊக்குவிப்பதாக பாடி இருக்கிறார். குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக மட்டும் வாய் திறப்பவராக விஜய் இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் – ஆதிக் இணையும் படத்திற்கு வில்லனை செலக்ட் செய்த படக்குழு! போரடிக்காம இருந்தா சரி

இப்படியாக சில வரிகளை சுட்டிக்காட்டி விஜய் மீது புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதே டிரிக்கை ஓயாம செய்யாதீங்க. வேற எதையாது யோசிங்க எனக் கலாய்த்து வருகின்றனர். மேலும், அதை அப்படியே விட்டா கூட போயிடும். சும்மா புகார் கொடுத்தே புரோமோட் செய்றீங்களே என்ற ட்ரோல்களையும் பார்க்க முடிகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily