Connect with us
goat

Cinema News

இந்த பாட்டாவது தேறுமா?!.. வெளியானது கோட் பட செகண்ட் சிங்கிள் அப்டேட்!..

நடிகர் விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட சில படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தில் இதுவரை இல்லாத வகையில் விஜய் ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு, அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். இதற்காக ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் ஏஜிங் தொழில்நட்பத்தை படக்குழு பயன்படுத்தி இருக்கிறது.

இந்த படத்தில் விஜயுடன் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் என பலரும் நடித்து வருகிறார்கள். பல வருடங்களுக்கு பின் விஜயுடன் சினேகா நடித்திருக்கும் திரைப்படம் இது. வித்தியாசமாக இப்படத்தை வெங்கட்பிரபு உருவாக்கி வருவதால் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அஜித் அரசியலுக்கு வருவார்னு ஜாதகத்திலேயே இருக்கு!.. புள்ளி விபரம் சொல்லும் இயக்குனர்…

அப்பா – மகன் மட்டுமில்லாமல் 3வதாக ஒரு கெட்டப்பிலும் சில காட்சிகளில் விஜய் வருகிறாராம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ‘விசில் போடு’ என்கிற பாடல் வெளியானது. ஆனால், இந்த பாடல் ரசிகர்களை கவரவில்லை.

விஜய் ரசிகர்கள் பலருக்குமே அந்த பாடல் பிடிக்கவில்லை. எனவே, யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போய் அவரை கண்டபடி திட்டவே இன்ஸ்டாகிராம் கணக்கையே மூடிவிட்டு போய்விட்டார். விசாரித்ததில் 4 டியூன்கள் யுவன் விஜய்க்கு அனுப்பி இருக்கிறார். அதில், விஜய் தேர்ந்தெடுத்த டியூன்தான் ‘விசில் போடு’ பாடலாக வெளிவந்தது தெரியவந்தது.

song

ஒருபக்கம், அடுத்து வெளியாகும் பாடலாவது நன்றாக இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜுன் 22ம் தேதியான நாளை விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட விருப்பதால் கண்டிப்பாக கோட் படத்தின் முக்கிய அறிவிப்பு மேலும் செகண்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்நிலையில், நாளை செகண்ட் சிங்கிள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ‘சின்ன சின்ன கண்கள்’ என்கிற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இதை நடிகர் விஜயே தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த செய்தி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top