Categories: Cinema News latest news

கோட் படத்தில் எஸ்.கே, ஜீவன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவங்கதானா? நல்லா இருக்கே!

GoatMovie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சில முக்கிய வேடங்களுக்கு முதலில் தேர்வு செய்த நடிகர்கள் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ப்ரேம்ஜி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: 50 மணி நேரம் ரஜினி புகழ் பாடிய ஆர்.ஜே.விக்னேஷ்!.. மனம் உருகி வாய்ஸ் நோட் போட்ட சூப்பர்ஸ்டார்.

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு செய்திருந்தார். இப்படத்தில் விஜயிருக்கு அப்பா மகன் என இரண்டு வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் நடிகை திரிஷா, சிவகார்த்திகேயன், விஜயகாந்தின் ஏஐ என பல கேமியோக்கள் இடம் பெற்றிருந்தது.

படத்தில் ஹீரோவாக ஒரு பக்கம், வில்லன் ஜீவாவாக ஒரு பக்கம் விஜய் நடிப்பில் அசத்தியிருப்பார். ஆனால் முதலில் இப்படத்தில் மகன் ஜீவாவாக நடிக்க ஜேசன் சஞ்சயை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டதாம். ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லாத சஞ்சய் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தில் வில்லன் ஜீவாவிற்கு தான் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டிருந்ததால் விஜயை அந்த வேடத்தை செய்யலாம் என திட்டமிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடைசியாக சிவகார்த்திகேயன் கேமியோவிற்கு சிலம்பரசனை அழைத்து வரவும் படக்குழு திட்டமிட்டதாம்.

இதையும் படிங்க: அண்ணாத்த படத்தில் நயன் இல்ல.. நாங்கதான் மெயின்னா இருந்தோம்.. குஷ்பு சொன்ன ஆச்சரிய தகவல்

விஜயிற்காக வாரிசு திரைப்படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடி கொடுத்திருந்ததால் விஜயையும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபுவின் மாநாடு ஹீரோ என்பதால் படத்திற்கும் அது ஒத்துப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடிகர் சிம்புவின் கால்ஷீட் பிரச்சினையால் அதுவும் நடக்காமல் போனதாம். மேலும் முக்கியமாக வில்லன் கேரக்டரில் நடித்த மோகனுக்கு பதில் மேனனாக கௌதம் வாசுதேவ் மேனனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

பின்னர் அதுவும் சில காரணங்களால் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருந்தும் இவர்களுக்கு மாற்றாக வந்த இந்த கேரக்டரை ரசிகர்களை ரசிக்க வைத்ததும் குறிப்பிடத்தக்கது. 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily