Goat
கோட் படத்தோட டிரெய்லர் பற்றி இன்று மாலை அதிகாரப்பூர்வமான தகவல் வருமாம். டிரைலர் தேதியை பயங்கரமான புரோமோவுடன் ரிலீஸ் பண்ணப் போறாங்களாம். நாம எல்லாரும் நாளை சுதந்திரத்தினத்தன்று டிரைலர் வெளியாகும்னு எதிர்பார்த்தோம். ஆனால் ஆகஸ்டு 19ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆக உள்ளதாம். இதுக்கு என்ன காரணம்னா படக்குழுவுக்கு விஎப்எக்ஸ்ல கொஞ்சம் கூட திருப்தி இல்லையாம்.
விஜயை டீஏஜிங் தொழில்நுட்பத்துல பார்க்கும்போது சோட்டாபீம் மாதிரி இருக்காராம். இதுக்கு முன்னாடி ரிலீஸான படத்தோட சாங்ஸ் புரொமோ வீடியோக்களில் அவரது உருவம் அனிமேஷன்ல பார்த்த மாதிரி இருந்ததாம். அதனால ரொம்ப பர்பக்டா டீஏஜிங் டிரைலர்ல இருக்கணும்னு சொல்லி இருக்காங்களாம். அதனால தான் கோட் படத்தோட டிரைலரை ஆகஸ்டு 19ல் ரிலீஸ் பண்றதாக முடிவு பண்ணியிருக்காங்க.
Goat
ஏஜிஎஸ் நிறுவனம் கோட் படத்துக்கு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவை வைக்கலாம்னு இருந்தாங்களாம். ஆனால் திடீர்னு கோட் இசை வெளியீட்டு விழாவை கேன்சல் பண்ணிட்டாங்க. இதுக்குக் காரணம் விஜய் தான்.
அதாவது ஆகஸ்டு 20ல் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்ததாம். விஜய் அது வேணாம். சக்சஸ் மீட்டை வச்சிக்கலாம்னு சொல்லி விட்டாராம். என்ன காரணம்னா செப்டம்பர் 22ல் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரம்மாண்ட மாநாடு நடத்தப் போகிறேன்.
இதற்கிடையில் நான் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டா நல்லாருக்காது. அதனால் டைரக்டா நான் மாநாட்டுல கலந்துக்குறேன். அதுல தான் நான் முழு கவனத்தோட இருக்குறேன். கோட் படத்தோட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட கொண்டாடுங்க. நான் வரலன்னும் சொல்லி விட்டாராம். லியோ சக்சஸ் மீட் மாதிரி கோட் சக்சஸ் மீட் வச்சி எல்லாருக்கும் நன்றி சொல்லலாம்னும் அவர் சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…