Vijay
Jawan: கோட் திரைப்படத்தின் வசூல் வேட்டை குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தாலும் ரசிகர்கள் சில சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சிநேகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு செய்திருந்தார். செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தொடர்ச்சியாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது.
இதையும் படிங்க: இதுல கிரிக்கெட்! அங்க ஃபுட் பாலா? ‘கோட்’ க்ளைமாக்ஸ இந்த படத்துல இருந்துதான் சுட்டுருக்காரா?
இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 77 கோடி மட்டும் தான் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தயாரிப்பு குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவலாக கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 126 கோடி எனக் கூறப்பட்டது.
பண்டிகை நாள் என்பதால் நான்கு நாட்களும் தொடர் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக கோட் திரைப்படம் ஓடி வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு 4000 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வசூல் அதிகாரப்பூர்வமாக 126.32 கோடி எனக் கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: இமானை மிரட்டினார் சிவகார்த்திகேயன்!. அதனால்தான் சொன்னோம்!.. வலைப்பேச்சு பகீர்!…
இந்நிலையில் கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் பத்தாயிரம் திரையரங்குகளில் ஓடியது. ஆனால் அப்படத்தின் முதல்நாள் வசூல் 129.6கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாதி திரையரங்குகள் கணக்கில் கூட ஓடாத கோட் திரைப்படம் எப்படி இவ்வளவு வசூல் செய்திருக்கும் என கேள்விகள் எழுந்திருக்கிறது.
இந்த வசூல் கணக்கு தற்போது மற்ற நடிகர்களின் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. விரைவில் படம் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என கூறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…