×

தானாக சென்று தலையை வெட்ட குடுத்த ஆடு! - அருவாவை தயாராக வைத்திருக்கும் நெட்டிசன்கள்! 

ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு டுவிட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் விஷ்ணு விஷால். குறிப்பாக குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட கதை, டைவர்ஸ் கதை குறித்து சுய விளக்கம் கொடுத்த பிறகு ரொம்ப நல்ல பெயரை பெற்றார்.
 
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் என்ற பெயர் மட்டுமில்லாமல் நல்ல மனிதர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. அதை தொடர்ந்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் பாசிட்டிவ் பதிவுகளையே பகிர்ந்து வருகிறார். இதனால் அவரை யாரும் பெரிதாக கலாய்ப்பதில்லை. 

இதுகுறித்து விஷ்ணு விஷால், "சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட நெகட்டிவ் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் என் விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. என் மீதான அன்புக்கு நன்றி." என்று பகிர்ந்துள்ளார். ஆனால் ரசிகர்களோ, "உங்கள இறங்கி அடிக்க ரொம்ப நாள் ஆகாது, எப்ப வேணா கத்தி உங்க பக்கம் திரும்பும் உஷாரா இருங்க" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News