×

ஓடிடியில் மூக்குத்தி அம்மன்? அடுத்த ஏழரையை ஆரம்பிக்கும் ஆர் ஜே பாலாஜி!

நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான எல் கே ஜி திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து அவர் அதே தயாரிப்பாளருக்கு மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளாட். இந்த படம் படப்பிடிப்பு முடிந்து தற்போது கிட்டத்தட்ட ரிலீஸுக்கு தயாரான சமயத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தினை ஓடிடி பிளாட்பார்ம்களில் ஒன்றில் ரிலீஸ் செய்ய அதன் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவின் சூரரைப் போற்று என்ற மிகப்பெரிய திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் சூர்யா மேல் கோபமாக இருந்த நிலையில் இப்போது நயன்தாரா படமும் ரிலீஸாக இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News