×

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகரை கடவுளாக வழிபட்ட மக்கள்!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நோய் தொற்றினால் வருமானம் இழந்தது பாதிக்கப்பட்டு வரும் மக்கள் பலருக்கும் முடிந்தவரை உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் ஆரம்பத்தில் இருந்தே  வேலை இழந்து பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் அவரது உதவிகளை எண்ணி ஒடிசா மக்கள் கடவுளாக வழிபட்டுள்ளனர்.  பெரிய பேனர் வைத்து கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் மாமன்னர் என்று சோனு சூட்டுக்கு புகழாரம் சூட்டி பூஜை செய்து வழிபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு சோனு சூட் உங்கள் அன்பிற்கு நன்றி இருந்தாலும் என்னைக் கடவுளாக பார்க்க வேண்டாம் என மாக்கள் மனங்களில் இடம்பெற்றுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News