×

மீண்டும் திருமணம் செய்ய போகிறேன் - புது காதலரை அறிமுகப்படுத்திய ஆர்த்தி!

கோவை சரளாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.

 

தன்னுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்த ஆர்த்தி அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தற்ப்போது  ஃபேஸ் ஆப் மூலம் ஆண் போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்டு  ‘என்னுடைய புதிய அழகான காதலன். நான் அவரை திருமணம் செய்துகொள்ள போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் கணேஷ்’ என கிண்டலாக கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News