AK64: அஜித் கேட்ட சம்பளத்த கொடுக்குறேன்.. வசமா சிக்கிய தயாரிப்பாளர்?!...
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி ரசிகர்களிடையே வரவேற்பை பெறவே மீண்டும் அவர் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக ஒரு படம் பேசப்பட்டு அது அஜித்தின் 64வது படம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் இந்த படம் நகரவில்லை. அதற்கு காரணம் அஜித் கேட்ட சம்பளம் 185 கோடி. அவ்வளவு சம்பளம் கேட்டதால் தமிழ்நாட்டில் உள்ள எந்த தயாரிப்பாளரும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை.
குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தையே அஜித் தரப்பு அணுக ‘இந்த படத்தால் எங்களுக்கு 50 கோடி நஷ்டம்.. அஜித் சம்பளத்தை குறைத்துக் கொண்டால் நாங்கள் இந்த படத்தை தயாரிக்கிறோம்’ என சொல்ல அஜித் தரப்பு பின்வாங்கியது.
சன் பிக்சர்ஸ், லலித் குமார், லைக்கா உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்களின் கதவை தட்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரிக்க போகிறார் எனவும், அஜித் 2 கோடி குறைத்து 183 கோடிக்கு ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது அவராலும் பணத்தை புரட்ட முடியாததால் இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்கிறார்கள். ஏனெனில் AK 64 படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி. தற்போது புதிய தயாரிப்பாளரை அஜித் தரப்பு தேடி வருகிறது.

கடந்த சில நாட்களாக மும்பையில் முகாமிட்டிருக்கும் அஜித் தரப்பு அங்குள்ள தயாரிப்பாளர்களிடம் பேசி வந்தார்கள். இந்நிலையில் தமிழில் உருவாகும் பல படங்களுக்கு பைனான்ஸ் பண்ணும் கோல்ட்மைன் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் அஜித் கேட்ட 183 கோடி சம்பளத்தை கொடுக்க அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்கிறார்கள். இந்த நிறுவனம்தான் ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து படத்தின் ப்ரீ புரடெக்ஷன் வேலைகளை ஆதிக் ரவிச்சந்திரன் துவங்கியிருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள். .
அஜித்தின் வலிமை, விடாமுயற்சி போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. துணிவு, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் நல்ல லாபத்தை கொடுத்தது. அதில் குட் பேட் அக்லி படம் வினியோகஸ்தர்களுகும், தியேட்டர் அதிபர்களுக்கும்தான் லாபமே தவிர தயாரிப்பாளருக்கு இல்லை. ஆனாலும் அஜித் தனது சம்பளத்தில் பிடிவாதமாக இருக்கிறார். இவ்வளவு சம்பளம் கொடுத்து அஜித்தை வைத்து படமெடுப்பது பெரிய ரிஸ்க் என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.
