×

முதல் போட்டியிலேயே காயம்…. ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் அஸ்வின்?

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்த அஸ்வின் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

 

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்த அஸ்வின் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

5 மாத காலமாக கொரோனா காரணமாக தள்ளிப்போன ஐபிஎல் தொடர் நேற்று முன் தினம் துபாயில் தொடங்கியது. இதில் இரண்டாவது போட்டியாக நேற்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் களத்தில் டெல்லி அணி வீரர் அஸ்வினுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசி களத்தில் இருந்து வெளியேறினார். காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இது டெல்லி அணிக்கு பின்னடைவாக அமையும்.  ஏற்கனவே ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் மலிங்கா ஆகியோர் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஐபிஎல் தொடரில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News