×

கோபிச்செட்டிப்பாளையம் பள்ளி ஆசிரியரானார் ஹிப் ஹாப் ஆதி..!

கொரோனா லாக்டவுனில்  ஹிப் பாப் ஆதி ஆசிரியராக மாறியுள்ளார்.

 

இதுகுறித்து கூறியுள்ள அவர், "கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள்" என கூறியுள்ளார்.

ஹிப் பாப் ஆதி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக மாறி இருக்கிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரமெடுத்த ஆதி தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஒரு நடிகர் , இசையமைப்பாளார் என்பதையும் தாண்டி இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போல் நடிகர் சூரி மதுரை அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News