×

ரீவைண்ட் - கோபுர வாசலிலே

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கோபுர வாசலிலே படம் பற்றி
 
gopura vasalaliey

கடந்த 1991ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி வெளியான திரைப்படம்தான் கோபுர வாசலிலே. இந்த படத்தில் கார்த்திக், பானுப்பிரியா,சுசித்ரா, நாசர், சார்லி, ஜூனியர் பாலையா , வி.கே ராமசாமி ஆகியோர் நடித்திருந்தார்கள்.

gopura vasaliley

முதல் காதல் தோல்வியால் முதல் காதலியின் மரணத்தால் நிலை குலைந்த கார்த்திக் எல்லாவற்றையும் மறந்து இன்னொரு பெண்ணான பானுப்ரியாவை காதலிக்கிறார்.பானுப்ரியாவுடன் கார்த்திக் ஒட்டி உறவாட, அது பிடிக்காத நண்பர்கள் சார்லி, நாசர், ஜூனியர் பாலையா போன்றோர் ஜனகராஜின் உதவியுடன் பல படுபாதக செயல்கள் செய்து கார்த்திக், பானுப்ரியா காதலை முறியடிக்க முயற்சி செய்கின்றனர். ஏனென்றால் கார்த்திக்கின் வருமானத்தில்தான் நண்பர்களாகிய இவர்கள் சாப்பிடுவார்கள் கார்த்திக் திருமணமாகி சென்று விடக்கூடாது என முயற்சி செய்தும் ஏற்கனவே பானுப்ரியாவின் அப்பா வி.கே ராமசாமி மேல் உள்ள கோபத்தினாலும் அந்த காதலை இணைய விடாமல் செய்வார்கள். கடைசியில் உண்மை தெரிந்த கார்த்திக் நண்பர்களை கடத்திக்கொண்டு ஒரு பங்களாவில் அடைத்து விடுவார் அவர்களை கார்த்திக் என்ன செய்கிறார் என்பதே கதை.

gopura vasalaliey

கார்த்திக் மெளனராகத்தில் மட்டும்தான் க்யூட் ஆக நடித்திருப்பார் என பலரும் சொல்வார்கள். ஆனால் கார்த்திக் நடிக்கும் படங்கள் எல்லாம் க்யூட்தான் அதிலும் இந்த படம் ரொம்ப க்யூட்டாக இருப்பார். முதல் காதலி சுசித்ராவிடம் காதலை சொல்ல வைக்க பல குறும்புத்தனங்கள் செய்வார். அவர் வேலை பார்க்கும் ஸ்கூலில் பள்ளி பிரின்ஸிபல் ஆக வரும் நாகேசுக்கும் கார்த்திக்கும் வரும் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. இர்ரெஸ்பான்ஸிபிள் இர்ரெலவண்ட் என நாகேஷ் வரும் காட்சிகள் எல்லாம் சிரிக்க வைக்கும்.

டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்ததாக அடிக்கடி மாட்டிக்கொள்ளும் அப்பாவி கார்த்திக், பிரின்ஸிபால் நாகேஸ் சொல்லுக்கிணங்க பப்ளிக்ல மன்னிப்பு கேட்கும் காட்சி எல்லாம் கார்த்திக்கின் குறும்புத்தனம் ரசிக்கும்படி இருக்கும்.

kobura vasaliley

படத்தின் கதை எழுதியவர் பல மலையாளப்படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான சீனிவாசன் ஆவார். இவர் ப்ரியதர்ஷனின் படங்களில்தான் அதிகம் தென்படுவார். வசனம் எழுதியவர் கோகுல கிருஷ்ணன். இவர் பாஸில் உட்பட மலையாள இயக்குனர்களின் படங்கள் தமிழில் வருகிறதென்றால் கோகுலகிருஷ்ணன் தான் வசனம் எழுதி கொடுப்பார் அவரது வசனத்தில்தான் படம் தமிழ் நேட்டிவிட்டிக்கு சரியாக வரும் என்பது இயக்குனர்களின் நம்பிக்கை . அது என்றும் பொய்த்ததில்லை.

இந்த படத்தை கலைஞர் கருணாநிதியின் வாரிசான தற்போதைய இளம் நடிகரான அருள் நிதியின் அப்பா முக.தமிழரசு தயாரித்து இருந்தார். ஓப்பனிங் டைட்டில் இசையிலேயே இளையராஜா பல இதயங்களை கட்டி போட்டிருப்பார்.ரயில் சவுண்ட்க்கு நடுவில் தட தட என ஓடும் ரயிலுக்கு நடுவில் புல்லாங்குழல் இசையும் இணைந்து ஒலிக்கும் டைட்டில் பிஜிஎம்மே அட்டகாசமாக இருக்கும்.

தேவதை போலொரு, காதல் கவிதைகள், நாதம் எழுந்ததடி, தாலாட்டும் பூங்காற்று, ப்ரிய சகி உள்ளிட்ட பாடல்களும் கேளடி என் பாவையே,   போன்ற பாடல்களும் இளையராஜாவின் இசையில் ரசிக்க வைத்தன. இந்த பாடலில் நடிகர் மோகன்லால் கெஸ்ட் அப்பியரன்ஸாக வந்து போவார்.

இயக்குனர் பிரியதர்ஷனுக்கு இதுதான் தமிழில் அதிகாரப்பூர்வமான முதல் படமாகும். அதற்கு முன் பிரியதர்ஷன் இயக்கிய தமிழ்ப்படம் ஒன்று வெளிவரவில்லை என சொல்லப்படுவதுண்டு.

மொத்தத்தில் கோபுர வாசலிலே திரைப்படம் 90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத படம் ஆகும்.

From around the web

Trending Videos

Tamilnadu News