×

அந்த படம் மட்டும் வந்தா?!... களம் இறங்கிய கவுண்டமணி... அதுக்குள்ள இந்த கொரோனா!....

 
gounda

தமிழ் சினிமாவில் கவுண்டமணி -செந்தில் என்றாலே சிரிப்புக்கு பஞ்சமில்லை. 90களில் தமிழ் சினிமாவையே ஆண்டவர் கவுண்டமணி. எதிரில் இருப்பவர் என்ன சொன்னாலும் அதற்கு கவுண்டர் கொடுப்பவர் என்பதால் அவருக்கு இந்த பெயர். கவுண்டர் மணி ஒரு கட்டத்தில் கவுண்டமணியாக மாறிவிட்டது எனக் கூறுகிறார்கள்.

இவரும் செந்திலும் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் வயிறு குழுங்க சிரிப்பார்கள். 90களில் ராமராஜன், சத்தியராஜ், பிரபு உள்ளிட்ட பல ஹீரோக்களின் படத்தில் முதலின் கவுண்டமனியின் கால்ஷீட்டைத்தான் வாங்குவார்கள். கவுண்டமணி -செந்தில் இருவரும் தனி நகைச்சுவை காட்சிகளில் நடித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஹீரோவுடன் வலம் வரும் அளவுக்கு கவுண்டமணி உயர்ந்தார்.

காமெடியன், ஹீரோ, குணச்சித்திர வேடம், வில்லன் என கவுண்டமனி செய்யாத கதாபாத்திரங்கள் இல்லை. ஒரு கட்டத்தில் உடல் நலக்குறைவால் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். ஆனாலும், யாரேனும் ஒரு புதிய இயக்குனர் அவரை சந்தித்து சம்மதிக்க வைத்து அவரை நடிக்கை வைத்து விடுவார். அப்படித்தான், 49 ஓ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். 

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். அதற்கான கதையை கேட்டு கவுண்டமணி ஓகே செய்துவிட, படக்குழு படப்பிடிப்பிற்கு தயாரானது. ஆனால், அதற்குள் கொரோனா 2வது அலை துவங்கிவிட படப்பிடிப்புகள் முடங்கிக்கிடக்கிறது.

இந்த கொரோனா பரவல் குறைந்து ஊரடங்குகள் முடிவுக்கு வந்த பின் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News