×

கவுண்டமணி பேசிய முதல் வசனம் இதுதான்!.. சுவாரஸ்ய தகவல்....

 
goundamani

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர் கவுண்டமனி. தொடக்கத்தில் செந்திலுடன் இணைந்து தனி டிராக் காமெடி செய்து வந்தவர். ஒரு கட்டத்தில் ஹீரோக்களுடன் வலம் வரும் 2வது ஹீரோவாக உயர்ந்தார். பிரபு, சத்தியராஜ், ராமராஜன், சரத்குமார் என 90களில் முன்னணி ஹீரோக்கள் படத்தில் இவர் நிச்சயம் இருப்பார். இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் அவர் பேசிய முதல் வசனம் என்ன என்பது இங்கே பகிர்கிறோம்.

கவுண்டமணி நடித்த முதல் திரைப்படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் கதாநாயகனாக நடித்த படத்தில் ஒரு காட்சியில் வருவார். ஆனால், அவருக்கு வசனம் எல்லாம் இல்லை. அதன்பின் சிவாஜி. கே.ஆர். விஜயா, முத்துராம் நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தில் ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. ஒரு காட்சியில் முத்துராமனுக்கு பதில் பேருந்து ஓட்டுனராக கவுண்டமணி நின்றிருப்பார். 

அவரை பார்க்கும் சிவாஜி ‘இதுக்கு முன்னாடி வேட டிரைவர் இல்ல?’ என கேட்பார். அதற்கு கவுண்டமணி ‘ சார்.. அவர் ரெண்டு நாளைக்கு முன்னாடி வேலையை விட்டு போயிட்டார் சார்’ என பதில் சொவார். இதுதான் சினிமாவில் கவுண்டமணி பேசிய முதல் வசனமாகும்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News