
Cinema News
எந்த நிகழ்ச்சிக்கும் வராத கவுண்டமணி இங்கு வந்ததன் காரணம் என்ன.?! நெகிழ்ச்சியூட்டும் பின்னணி இதோ..,
Published on
தமிழ் சினிமாவில் தனது வேலை நடிப்பது மட்டுமே மற்றபடி எந்தவித சினிமா நிகழ்ச்சிகளிலும் அல்லது பத்திரிகை பேட்டிகளிலும் தனது பேட்டிகள் வந்துவிடக்கூடாது என்பதில் சிலர் குறிக்கோளாக இருக்கின்றனர். அதில் தற்போதைய காலத்திற்கு நமக்கு தெரிந்தவர் அஜித்குமார். அதுபோல அந்த காலத்து அஜித்குமார் என்று சந்தானம் அழைத்த ஒரே நடிகர் அது கவுண்டமணி தான்.
பொதுவாக நடிகர் கவுண்டமணி தனது வேலை நடிப்பது மட்டுமே என்று தனது குடும்பத்தாரை கூட தற்போது வரையில் கேமரா வெளிச்சம் படாமல் பாதுகாத்து வருகிறார். பொதுவாக எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் அவர் கலந்து கொள்வதில்லை. அப்படி இருக்கையில் தற்போது அவர் வேல்ஸ் நிறுவன நிறுவனர் ஐசரி வேலன் அவரின் நினைவாக நடத்தப்பட்ட விழாவிற்கு கலந்துகொண்டு அவரை பற்றி பேசியுள்ளார் கவுண்டமணி.
எந்த விழாவிற்கும் வராத கவுண்டமணி இந்த விழாவிற்கு மட்டும் வந்ததன் காரணத்தை அவரே மேடையில் தெரிவித்தார். அதாவது ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் போது, வேல்ஸ் நிறுவனர் ஐசரி வேலனை கவுண்டமணிக்கு தெரியுமாம். இருவரும் நெருங்கிய நண்பர்களாம்.
இதையும் படியுங்களேன் – விக்ரம் இசை வெளியீடு : பேரதிர்ச்சியூட்டும் செய்தி வெளியானது.! அந்த விஷயம் நிச்சயம் நடக்காதாம்.!
இருவரும் ஒன்றாகத்தான் நாடகங்கள் போடுவார்களாம். இவர்கள் நடத்திய நாடகத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தலைமை தாங்கி உள்ளாராம். பின்னர் முதலில் படவாய்ப்பு ஐசரி வேலனுக்கு கிடைத்துள்ளதாம். அதன் பிறகுதான் கவுண்டமணிக்கு நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.
அந்தளவுக்கு ஆரம்பத்திலிருந்தே அவருடன் சினிமா பயணத்தில் நெருக்கமான இருந்த நண்பர் ஐஸரி வேலன் என்பதால், அவரது நினைவாக நடத்தப்படும் இந்த விழாவிற்கு கவுண்டமணி முதல் ஆளாக வந்துள்ளார். இந்த விழாவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...
TVK VIJAY : ”இப்படி ஒரு அடிப்படை நேர்மை கூட விஜயிடம் இல்லை. அவர் மட்டுமல்ல அந்தக் கட்சியில் இருக்கும் இரண்டாம்...
Dhanush: இட்லி கடை படத்துக்கு தனுஷ் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகராக தன்னுடைய...