முதல் சீன் நடிச்சவுடனே படம் ஹிட்டுன்னு சொன்ன கவுண்டமணி!.. அட அந்த படமா?!…
ஏற்கனவே சில படங்களை இயக்கியிருந்தாலும் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் சுந்தர்.சி. இந்த படத்தின் வெற்றி சுந்தர்.சியை கோலிவுட்டில் ஒரு முன்னணி இயக்குனராக மாற்றியது. 1996ம் வருடம் வெளிவந்த இந்த படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்பா நடித்திருந்தார்..
மேலும் படம் முழுவதும் கார்த்திக்குடன் வரும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருந்தார். மேலும் மணிவண்ணன், செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சிற்பி இசையமைத்தார். படம் மட்டும் இல்லாமல் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.. குறிப்பாக ஐ லவ் யூ, லவ்யூ சொன்னாளே, அழகிய லைலா போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த நடிகர் கார்த்திக் ‘உள்ளத்தை அள்ளித்த படத்டின் முதல் நாள் ஷூட்.. முதல் காட்சியில் நானும், அண்ணன் கவுண்டமணியும் நடித்தோம். ஷாட் முடிஞ்சதும் கவுண்டமணி அண்ணனுக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல.. ‘எப்பா இந்த படம் செம ஹிட்’ அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு..
அவரோட வாய் மூகூர்த்தமா என்னன்னு தெரியல.. அந்த படம் 200 நாளுக்கு மேல ஓடுச்சு.. அவர் கூட நடிக்கும் போது நான் சிரிச்சிடுவேன்.. பயங்கரமா காமெடி பண்ணுவார்.. அவர் கூட நடிக்கும் போது சிரிக்காம நடிக்கிறது ரொம்ப கஷ்டம்’ என சொல்லியிருக்கிறார்.
