தமிழ் சினிமாவில் சிலரது இடங்களை நிரப்புவது மிக கடினம். அப்படி அந்த ஜாம்பவான்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவர். அப்படி இடம்பிடித்தவர்களில் முக்கியமானவர் கவுண்டமணி. இவரது நக்கல், நையாண்டி பேச்சுக்கு மயங்காதோர் தமிழ் சினிமாவில் யாருமே இல்லை என்று கூறும் அளவிற்கு ரசிகர்களை பெற்றவர்.
தனது மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். பெரும்பாலும் இவர் பொது நிகழ்ச்சிகளிலோ, சினிமா மேடைகளிலோ அவர் கலந்துகொள்ள மாட்டார். மேலும், இவர் காசு விஷயத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்வார் என்று பொதுவான பேச்சு சினிமா வட்டாரத்தில் உண்டு.
ஒருமுறை இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டது, நீங்க ஒரு ரூபாய் கூட விடமாடீர்களாம். என்று கேட்டதற்கு அவர் ஓர் சுவாரசியமான தகவலை கூறினார். அதாவது, ‘ மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட அன்று, அவர் ஓர் அரங்கில் பேசி கொண்டிருந்தாராம். அந்த அரங்கிற்கு உள்ளே செல்ல வேண்டுமென்றால் டிக்கெட் எடுத்து செல்ல வேண்டுமாம்.
இதையும் படியுங்களேன் – இந்த வயசுல இப்டி தான் தோணும்., இது ரஜினி சொன்னது.! கே.எஸ்.ரவிக்குமார் பளார் பேச்சு.!
அப்போது அவரை சுட வந்த கோட்ஸே டிக்கெட் எடுக்க வில்லையாம். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல், அங்குள்ள காவலாளிக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுத்து உள்ளே சென்றானாம். பிறகு தான் அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அதில் மகாத்மா காந்தி உயிரிழந்துள்ளார்.
இதனை கூறி நமது வாழ்வின் ஒவ்வொரு ரூபாயும் முக்கியம் தான். அந்த ஒரு ரூபாயை அன்று அந்த காவலாளி வாங்காமல் இருந்திருந்தால் காந்தி அன்று சுட்டு கொல்லப்பட்டிருக்க மாட்டார். ஒரு ரூபாயின் மதிப்பு என்னவென்று இப்போது புரிகிறதா? என்று விளக்கம் கொடுப்பாராம் கவுண்டமணி.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…