Categories: Cinema News latest news throwback stories

கவுண்டமணியை நம்ப வைத்து ஏமாற்றிய சிம்பு.! அந்த சம்பவத்தால் சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்…

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. பெரிய நடிகர், சின்ன நடிகர், அரசியல்வாதிகள் என யாரையும் விடுவதாயில்லை. சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளிவிடுவார்.

 

அவரது காமெடியை பாலோ செய்து தான் தற்போதைய யோகி பாபு வரையில் காமெடி செய்து வருகிறார் என்றால் அது மிகையில்லை. அப்படி இருந்தவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி விட்டு இருந்தார் .

அப்போது, சிம்பு, நடிக்க இருந்த மன்மதன் படத்திற்காக அவரிடம் போய் பேசியுள்ளனர். அப்போது கவுண்டமணி கூறிய கண்டிஷன் என்னவென்றால், சும்மா ஒரு காட்சி ரெண்டு காட்சி எல்லாம் ஆகாது.  நிறைய காட்சிகள் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்களேன் –அதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது சார்… பாலிவுட் ஹீரோவை பந்தாடும் விஜய் சேதுபதி ரசிகர்கள்… வீடியோ உள்ளே…

அதற்கு ஓகே சொன்ன சிம்பு, பின்னர் படத்தில் அவரது காட்சியை நிறைய நீக்கி விட்டதால், கடுப்பான கவுண்டமணி. அடுத்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கேப் விட்டு சென்றுவிட்டார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்திற்கு கவுண்டமணியை சென்று பார்த்துள்ள்ளனர். ஆனால், அவர் மீண்டும் அதே கண்டிஷனை போட்டுள்ளாராம். அதற்கு சம்மதித்தால் நான் நடிக்கிறேன் என கூறிவிட்டாராம். இந்த முறை எழுதி வாங்கினாலும் ஆச்சயர்யப்படுவதிற்கில்லை.

Manikandan
Published by
Manikandan