×

கவுண்டமணியை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்... வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை அவரது இல்லத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
 
badf6083-4ae3-499f-afd4-9dbb7937c2d0

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கின்றன. இதில் டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் காமெடி மன்னன் நடிகர் கவுண்டமணியை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

siva

தமிழ் சினிமாவின் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நகைச்சுவை நடிகர் பட்டியலில் இருப்பவர் கவுண்டமணி. சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து நக்கல் செய்வது கவுண்டமணியின் பாணி. 

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வாய்மை. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு பின்னர் வேற படங்கள் எதிலும் கவுண்டமணி நடிக்கவில்லை.

siva

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை அவரது இல்லத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், “இது மகிழ்ச்சியான, சிறப்பான தருணம், இந்த நாள் என்றென்றும் நினைவில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News