குட்டி ஜானு நீயாமா இது...? இப்படி சிரிச்சியே தான் "மாஸ்டர்" Scene கெடுத்துப்புட்ட!

96 படத்தில் திரிஷாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி ஜி கிஷன். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார். தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் சவிதா என்ற கேரக்டரில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இதற்கிடையில் குறும்படம் , மியூசிக் ஆல்பம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியூண்டு ஷகர்ட் டாப் அணிந்துக்கொண்டு கவலை மறந்து சிரித்தபோது casual pose கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், " இப்படித்தான் மாஸ்டர் படத்துல அந்த சீரியசான சீன்ல சிரிச்சியே காரியத்தை கெடுத்துட்டு இருக்குற... அதனால தான் டெலீட்டட் சீன் ஆகிடுச்சு இப்போ தெரியுதா...? என விமர்சித்து கமெண்ட் அடித்துள்ளனர்.