×

விஜய் என்ன கேட்டாலும் செஞ்சு கொடுங்க!... மேலிடத்தில் பறந்த உத்தரவு!...

 

விஜய் திரைப்படங்கள் தொடர்ந்து பிரச்சனையில் சிக்கி வருகிறது. குறிப்பாக அவரின் திரைப்படங்கள் வெளியாகும் போது அரசியல் கட்சிகள் தொல்லை கொடுப்பது அதிகரித்து வருகிறார். ஆனால், தற்போது தேர்தல் நெருங்கு வரும் நிலையில், விஜய்க்கு குடைக்கப் போய், கோபத்தில் அவர் ரஜினி, கமல் ஆகியோரின் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் சிக்கலாகி விடும் என கணக்குப்போட்ட ஆளும் கட்சி தரப்பு, மாஸ்டர் ரிலீஸ் தொடர்பாக விஜய் தரப்பு என்ன கேட்டாலும் செய்து கொடுங்கள் என உத்தரவிட்டுள்ளதாம்.

மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு குறி வைத்து ஜனவரி 13ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, அரசின் மன நிலையை புரிந்த விஜய் தரப்பு 50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்பதை மாற்றி 100 சதவீத அனுமதி கொடுக்குமாறு கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் எல்லாமே கணக்குதான்!...

From around the web

Trending Videos

Tamilnadu News