×

தமிழகத்தில் ரேஷன் கடைகள் அதிரடி மாற்றம் -  தமிழக அரசு உத்தரவு

 
ration shop

தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. அதற்கான வாடகையை அரசு செலுத்தி வருகிறது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடங்களில் இயங்கும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் கட்டிடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து ரேஷன் கடை கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.  இதுபற்றி கூட்டுறவு சங்கபதிவாளர் சண்முகசுந்தரம் மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எனவே, கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகள் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News