×

ரேஷன் கடையில் தரமற்று பொருள் இருந்தால்? - அரசு எச்சரிக்கை...

 
ration

தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீதம் பேர் ரேஷன் கடைகளில் பொருட்களில் கிடைக்கும் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவற்றை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அதேநேரம், பல நேரங்களில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பொருட்கள் தரமற்று இருப்பதாக பொதுமக்களால் கூறப்பட்டு வருகிறது. தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் உள்ள பொருளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி ஆய்வு செய்யும் போது தரமற்ற, காலாவதியான பொருட்கள் இருந்தால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News