படம் துவங்கியது முதலே பஞ்சாயத்தை சந்திக்கும் ஒரே இயக்குனர் கவுதம் மேனன்தான். காதலை அழகாக காட்சிப்படுத்துவார். அதேபோல், ஆக்ஷன் மற்றும் சைக்கோ திரைப்படங்களையும் சிறப்பாக எடுப்பார்.
ஆனால், ஹீரோக்களுடன் பஞ்சாயத்து, படத்தை முடிக்காமல் பஞ்சாயத்து, படத்தை வெளியிட பஞ்சாயத்து என எப்போதும் இவரின் படங்கள் பஞ்சாயத்துகளில் சிக்கியிருக்கும்.
விக்ரமை வைத்து இவர் துவங்கிய ‘துருவ நட்சத்திரம்’ இந்த வகையை சேர்ந்ததுதான். விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் என பலரும் நடித்த இப்படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது.
இதையும் படிங்க: இட்லி துணி மட்டும்தான் டிரெஸ்ஸா?!….மொத்தமா கழட்டி போஸ் கொடுத்த ரித்து வர்மா….
gowtham menon
ஆனால், திட்டமிட்ட பிடி படத்தை எடுக்காதது, முழுக்கதையும் தயாராக இல்லாமல் இருந்தது இது விக்ரமுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் இப்படத்தில் நடிப்பதை நிறுத்தினார் விக்ரம். கவுதம் மேனன் பல முயற்சிகள் எடுத்தும் மிச்ச காட்சிகளை அவரால் எடுக்க முடியவில்லை.
அதேநேரம், 4 மணி நேரத்திற்கும் மேல் வரும் காட்சிகளை கவுதம் மேனன் எடுத்திருப்பதால் இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளாராம்.
ஒரு படத்திலேயே இவ்ளோ பஞ்சாயத்து.. இதுல ரெண்டு பாகமா? என சிரிக்கிறார்கள் கோலிவுட் காரர்கள்..
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…