×

கமலின் முன்னாள் காதலி வீட்டில் உளாவிய மர்ம நபர்! மது போதையில் செய்த காரியத்தை பாருங்க!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌதமி. நடிகர் கமல் ஹாசனுடன் Live in relationship இணைந்து நீண்ட நெடும் காலம் வாழ்ந்து வந்தனர். பின் இருவரும் பிரிந்துவிட்டர்.

 

சமூக சேவைகளை செய்து வரும் கௌதமி பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்து பல விழிப்புணர்வுகளை செய்து வருகிறார். நடிகை கௌதமி தற்போது சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் தன் மகள் சுப்பலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

அண்மையில் பலத்த மழை பெய்த சமயத்தில் கடந்த திங்கள் கிழமை இரவில் அவரின் வீட்டு சுவர் ஏறி குதித்து மர்ம நபர் உலாவி வருவதை கேமிரா காட்சியில் பார்த்த கௌதமி அருகே இருக்கும் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

உடனே இடத்திற்கு வந்த போலிசார் அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்ததில் குப்பத்தை சேர்ந்த பாண்டியன் என்பது தெரியவந்தது. மதுபோதையில் அந்த நபர் உலாவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு நடிகை கௌதமியின் வீடு என தெரியாது என கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரின் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து பின் பிணையில் விடுவித்தனராம். 

கமலின் முன்னாள் காதலி வீட்டில் உளாவிய மர்ம நபர்! மது போதையில் செய்த காரியத்தை பாருங்க!

From around the web

Trending Videos

Tamilnadu News