×

ஓவியாவுக்கு இன்னும் கிரேஸ் குறையல.. இந்த வீடியோ பாருங்க....
 

 

களவாணி படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் நடித்தார். இந்த நிலையில் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே.

ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வாய்ப்பையும் 90ml என்ற மோசமான படத்தில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார்.  

தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், மதயானை கூட்டம் படத்தில் இடம் பெற்ற கோண கொண்டக்காரி பாடலுக்கு ரசிகர் ஒருவருடன் அவர் கொடுத்த போஸ் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News