×

ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள்... யார் அந்த மாப்பிள்ளை?
 

நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
 
 
ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள்... யார் அந்த மாப்பிள்ளை?

கோலிவுட்டின் சின்ன குஷ்பூ ரேங்கில் ரசிகர்களிடம் புகழை பெற்றவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வந்தவருக்கு சில நாட்களாக அப்படி எந்த வாய்ப்புகளும் பெரிதாக அமையவில்லை. இதனால் யூ ட்யூப் பக்கம் கூட அம்மணி காற்று வீசியது. கோலிவுட்டின் முதல் நாயகியாக ஒரு யூ ட்யூப் சேனலை தொடங்கினார். தொடர்ந்து, பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் உருவாக்கியிருக்கும் ஒரு ஆல்பம் சாங்கில் ஹன்சிகா நடனமாடியுள்ளார். 

இந்நிலையில், அம்மணி வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால், கல்யாணம் ஹன்சிகாவிர்கு இல்லையாம். அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கு தான் வரும் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடக்க இருக்கிறது. பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த அரண்மனையை வாடகைக்கு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சிலர் ஹன்சிகாவிற்கு திருமணம் என கொஞ்சம் ஜெர்க் ஆகி இருந்தால் நாங்க பொறுப்பல்ல!
 

From around the web

Trending Videos

Tamilnadu News