×

நரைத்த தாடி... சோர்வடைந்த முகம்... ஆள் அடையாளமே தெரியாமால் மாறிப்போன விஷால்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்படும் விஷால், நடிப்பை தவிர்த்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கள் ஆகிய விஷயங்களில் பிஸியாக இருப்பவர். இதனால் அவர் பல சிக்கலிலும் சர்ச்சைகளிலும் சிக்கி பேசப்படுவார்.

 

இந்நிலையில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் விஷால் குறித்த செய்தி ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த  20 நாட்களுக்கு முன் நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருவரும் தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.

ஆனால், இந்த செய்தியை எந்த ஒரு மீடியாவும் வெளியிடவில்லை. இவ்வளவு பெரிய நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை ஏன் வெளியில் சொல்லவில்லை என ஆளாளுக்கு பேசி வந்தனர். இப்போது அவர்கள் இருவரும் குணமடைந்து ரிசல்ட் நெகட்டிவ் என வந்திருப்பதாக செய்திகள் கூறியது. குணமான பின்னரே செய்திகள் வெளியாகியிருப்பது. ஏன்...? எதற்கு இப்படி என பலரையும் மண்டை பிழிக்க வைத்தது.  

இந்நிலையில் இது குறித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது தந்தைக்கு முதலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் பணி செய்தால் எனக்கும் என்னுடைய மேலாளருக்கும் கொரோனா வைரஸ் பாதித்தது. பின்னர் ஆயுர்வேத சிகிச்சை மூலம்  ஒரே வாரத்தில் குணமானோம். என கூறியுள்ளார். இதில் நரைத்த தாடியுடன் சோர்வடைந்த முகத்துடன் ஆள் அடையாளமே தெரியாமல் முற்றிலும் மாறிப்போயுள்ள விஷாலை கண்டு அனைவரும் ஒரு நிமிடம் ஷாக்காகி விட்டனர். இதோ அவர் பேசிய முழு வீடியோ...

null

From around the web

Trending Videos

Tamilnadu News