×

பூம் பூம் மாடுடன் நாதஸ்வரம் வாசித்த நபருக்கு வாய்ப்பளித்த ஜி.வி.பிரகாஷ்

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் குடும்பத்தின் வாரிசான ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாக மாறினார்.

 
202008270016260457_Anvi-will-have-all-my-time-in-future-GV-Prakash_SECVPF

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் குடும்பத்தின் வாரிசான ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாக மாறினார்.

இவர் நடிப்பில் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் உருவாகி வருகிறது.

அதோடு இவரது இசையில் சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்த ஜிவி பிரகாஷ், ‘இந்த நபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள், அவரை பாடல் பதிவுக்கு பயன்படுத்தி கொள்வேன் என்று பதிவு செய்திருந்தார்.

மேலும் நாதஸ்வரம் வாசிபவறை குறிப்பிட்டு, மிகவும் திறமைசாலியாக இருக்கிறார். குறிப்புகள் மிக துல்லியமாக இருக்கின்றன என பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து நெட்டிசன் ஒருவர், நாதஸ்வரம் வாசிக்கும் நபரின் பெயர் நாராயணன் என்றும் அவரது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்தார்.

பெங்களூரு தெருக்களில் பூம் பூம் மாடுடன், நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக கலைஞருக்கு விரைவில் தன் இசையில் வாசிக்க வாய்ப்பளிப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News