×

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியின் மகள் பெயர் என்ன தெரியுமா ? 

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர், நடிகர் என  ஒரு சேர கோலிவுட்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படப்பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட் ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மனைவி நிஷா மற்றும் சைந்தவியுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், '''சைந்தவி,  உனது இளவரசி அன்வி (Anvi)-ஐ காண, இந்த லாக்டவுன் எப்பொழுது முடியும் என்று ஆவலுடன் இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதியினரின் மகளின் பெயர் அன்வி என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து விரைவில் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News