நானும் அரசியலுக்கு வருவேன் - விஜய் வழியில் ஜிவி பிரகாஷ்!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கி அதன் பிறகு ஹீரோவாக களம் இறங்கி தற்போது பிரபலமான ஹீரோ பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் .
இவர் டார்லிங் என்ற பேய் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ச்சியாக திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், பேச்சுலர், ஜெய்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இந்த நிலையில் அரசியல் வருகை குறித்து ஜிவி பிரகாஷ் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது பேசு பொருளாக இருக்கிறது. இன்னும் பதினைந்து வருடங்கள் சினிமாவில் இருப்பேனா என்று எனக்கே தெரியாது.
அதற்கு பிறகு மக்கள் பணிக்கு நான் நிச்சயம் வந்து விடுவேன். ஒரே கருத்துடைய அரசியல் கட்சி இருந்தால் அதோடு இணைந்து நான் செயல்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ஜிவி பிரகாஷ் தன்னுடைய அரசியல் பயணத்தை அறிவித்துள்ளார். விஜய் வழியில் அரசியலில் குதித்துள்ளார் ஜிவி என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
