Categories: Cinema News latest news

‘வாடிவாசல்’ படத்தில் இருந்து முக்கிய பிரபலம் நீக்கம்! கோபத்தில் வெற்றிமாறன் எடுத்த திடீர் முடிவு

தமிழ் திரை உலகில் ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவிபிரகாஷ். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த நடிகராகவும் அவ்வப்போது தன் படங்களின் மூலம் நிரூபித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களுமே மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இசையையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை. ஒரு சில படங்களுக்கு இவருடைய இசை தான் விருந்தாகி வருகின்றன. சொல்லப்போனால் பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு இவர்தான் இசையமைத்து வருகிறார்.

vadi1

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ஒரு புதிய படத்திற்கும் ஜி வி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். மேலும் சுதா கொங்கரா சூர்யா காம்போவில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார். இந்த நிலையில் வாடிவாசல் படத்திலிருந்து திடீரென ஜிவி பிரகாஷ் நீக்கப்பட்டு இருக்கிறார்.

அதற்குக் காரணம் சமீபத்தில் ஜீவி பிரகாஷ் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததன் விளைவுதான் என்று கூறுகிறார்கள். அமித்ஷாவும் தமிழ் சினிமாவில் பல துறைகளில் முன்னணியில் இருக்கும் பிரபலங்களும் சந்தித்துக் கொண்டனர். அதில் ஜி.வி பிரகாஷும் குறிப்பிடத்தக்கவர். மேலும் ஜி வி பிரகாஷை தேசிய அளவில் சினிமா துறையில் ஒரு தலைவராக இருக்க மத்திய அமைச்சரகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

vadi2

இதனால்தான் வெற்றிமாறனுக்கு ஜி வி பிரகாஷ் மீது கொஞ்சம் மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாம். வெற்றிமாறனின் சித்தாந்தமே வேறு மாதிரியாக இருக்கும். இந்த நிலையில் ஜீவி பிரகாஷ் மீது காவித்துண்டு விழுந்ததை அறிந்ததும் வெற்றிமாறனுக்கு அப்செட் ஆகி விட்டதாம். இதன் காரணமாகவே வாடிவாசல் படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini