×

குழந்தை பிறந்த நேரம் புகழின் உச்சிக்கு சென்ற ஜீவி... என்ன காரணம்?

ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள இந்த ஹாலிவுட் ஆல்பத்தின் பெயர் 'கோல்ட் நைட்ஸ்'. இந்த ஆல்பத்திலிருந்து 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது.

 
குழந்தை பிறந்த நேரம் புகழின் உச்சிக்கு சென்ற ஜீவி... என்ன காரணம்?

இதனை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இருவரும் வெளியிட்டார்கள். துள்ளலான இசை, I Need to Know என்று ஈர்க்கும் வரிகள் என சமூக வலைதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. யூடியூப் ட்ரெண்ட்டிங்கிலும் உடனடியாக இடம்பிடித்தது. 

இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அசுரன், சூரரைப் போற்று என இசையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜி.விக்கு இந்த ஹாலிவுட் ஆல்பம் என்பது அவருக்கு ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.

ஏ.ஆர்.ரஹ்மான், அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் தாணு, சூர்யா, தனுஷ், ராதிகா சரத்குமார், இயக்குநர் கார்த்திக் நரேன், ரைசா வில்சன், அலிசா அப்துல்லா உள்ளிட்ட பலரும் இந்தப் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இவர்கள் தவிர்த்து ஜி.வி.யின் திரையுலக நண்பர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வாட்ஸ்-அப் வாழ்த்தால் நெகிழ்ச்சியடைந்துள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News