Finally பாரத்துக்கு பதிலாக நிஞ்சாவில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!

 
Ninja Gv prakash kumar

'Finally' யூடியூப் சேனல் புகழ் பாரத் கதையின் நாயகனாக நடிக்கவிருந்த படம் தான் 'நிஞ்சா'. இதற்கு கடந்த 2025-ல் பூஜையும் போட்டனர். 

சமீபத்தில், பாரத் இந்த படத்திலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் முருகு இயக்கவுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக பிராத்தனா நாதன் நடிக்கவுள்ளார்.

இதற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் பூஜையுடன் துவங்கவுள்ளதாம்.

From Around the web