மனைவிக்குத்தான் டைவர்ஸ்!.. அன்வி எப்போதுமே என்னோட பொண்ணுதான்!.. ஜிவி பிரகாஷ் பைக் ரைடு!..
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இசை மற்றும் நடிப்பு திறமையால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், மகளுடன் செலவிடும் நேரத்தை ஜி.வி. பிரகாஷ் மிகவும் முக்கியமாக கருதுகிறார். இதனை அவ்வப்போது தனது சமூக வலைதள பதிவுகள் மூலம் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தி வருகிறார்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் ஜி.வி. பிரகாஷ், தற்போது பல புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஹாப்பி ராஜ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் அவர், தமிழ் சினிமாவின் பிஸியான நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் மற்றும் பிரபல பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் சிறுவயது நண்பர்கள். நீண்டகால காதலுக்குப் பிறகு 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு அன்வி என்ற அழகான மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பின்னர் தங்களது பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருப்பினும், மகள் அன்வியின் நலனுக்காக இருவரும் இணைந்து பெற்றோர் பொறுப்பை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது தனது மகள் அன்வியுடன் பைக்கில் அமர்ந்திருக்கும் அழகான புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "பைக்கை டெஸ்ட் பண்ணலாம்... யாரோ பயந்துட்டாங்க... அன்வி டைம்!" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில் தந்தை - மகள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் ஜி.வி. பிரகாஷின் எளிமையையும், மகள்மீது அவர் வைத்திருக்கும் பாசத்தையும் பாராட்டி வருகின்றனர்.
