விஜய்யின் ஜன நாயகனால் தனது 'Immortal' படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்த ஜி.வி.பிரகாஷ் குமார்!

 
Jana Nayagan Immortal

கோலிவுட்டின் தளபதியாக இருந்து இப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் விஜய் நடித்த கடைசி படமான 'ஜன நாயகன்' ஜூலை 23-ஆம் தேதி வெளியாகப்போகிறது என்று இன்று தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

இதையடுத்து இதே தேதியில் வெளியாகவிருந்த 'Immortal' படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் ஜானர் படமான இதில் கதாநாயகனாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.

ஹீரோயினாக 'இதயம் முரளி' கயாடு லோஹர் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்த படத்துக்கு சாம்.சி.எஸ் தான் இசையமைத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் எக்ஸ் தளத்தில் "தளபதி வந்தால் தள்ளிப்போய் தான ஆகனும். Immortal படத்தின் புதிய ரிலீஸ் தேதி செப்டம்பர் 4" என்று பதிவிட்டு இப்படத்தின் புதிய ப்ரோமோவையும் ரிலீஸ் செய்துள்ளார். 

From Around the web